மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவருடைய காதலரின் பெயர் இஷான் கட்டார். இவரும் நடிகர்தான். பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாகித் கபூரின் தம்பிதான் இஷான். 'தடக்' என்ற இந்திப் படத்தில்தான் இந்த ஜோடி திரையில் அறிமுகமானர்கள். மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'சாய்ரத்' என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்தான் 'தடக்' . இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஜான்வி இஷான் ஜோடி ரசிகர்களிடையே பிரபலமானது. இஷான் தற்போது புதிய ஹிந்திப் படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ஜான்வியும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி - இஷான் ஜோடி இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தங்கள் படங்களை வெளியிடுவதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வதாலும் ஹிந்தி மீடியாவில் இவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜான்வியுடன் காதலா என்று இஷானிடம் கேட்ட போது, 'நாங்கள் நல்ல நண்பர்கள். இதனால்தான் ஒன்றாக பல இடங்களுக்கு செல்கிறோம். ஜான்வி அதிகமாக தென்னிந்திய பாடல்களை கேட்பதால், எனக்கு தற்போது அந்தப் பாடல்கள் பிடித்துள்ளன’ என்று பதில் அளித்துள்ளார் இஷான்.

அண்மையில் ஜான்வி இஷான் கட்டர், ஷாகித் கபூர் மற்றும் ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அவர்களுடன் சேர்ந்து மதிய உணவை சமைத்துள்ளார். ரெட் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசியில் இந்த பிரியாணியை சமைத்த ஜான்வி கபூர், காதலருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பரிமாறியுள்ளார். ஜான்வி சமைத்த பிரியாணியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மிரா ராஜ்புட், சிவப்பு அரிசியில் பிரியாணி சமைத்துள்ள ஜான்விக்கு பாராட்டுகளைத் தெரிவிக்குமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

