ஆட்டம் ஆரம்பம்! சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் அப்டேட்ஸ்!
தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பதாகும்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்து நாட்கள் ஆன்மிகப் பயணமாக சென்னையிலிருந்து இமயமலைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10-ம் தேதி) புறப்பட்டுச் சென்றார்.
தான் நடித்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். உடல்நலக் குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக அவா் இமயமலை பயணத்தை ரத்து செய்திருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தா்பார்’ படத்தின் படப்பிடிப்பில் தொடா்ச்சியாக பங்கேற்று வந்தார் ரஜினி. மும்பையில் தொடா்ந்து நடந்து வந்த இந்தப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் தர்பார் படத்தில் நடித்துள்ளனர். அண்மையில் முருகதாஸ் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் தர்பார் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பதாகும். ஆதித்யா முருகதாஸின் மகனின் பெயர் மற்றும் அருணாச்சலம் அவரது தந்தையின் பெயர் என்றும் குறிப்பிட்டு இந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற பெயராக இது இருக்கும் என்று நினைத்து பெயர் வைத்ததாகக் கூறினார். கதை முழுக்க முழுக்க போலீஸ் ஸ்டோரி என்றும், இதில் அரசியல் துளியும் இல்லை என்றும் கூறினார் முருகதாஸ்.

படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறியுள்ளார். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த முருகதாஸிடம் கதையின் ஒன்லைன் என்னவென்று கேட்கப்பட்டபோது, அதை மட்டும் இப்போது சொல்ல இயலாது என்றும் பொங்கல் வரை காத்திருங்கள் என்று கூறினாராம். பொங்கல் அன்று ரசிகர்களுக்கு தீபாவளி வெடி அளிக்கவிருக்கிறார் முருகதாஸ்.
ரஜினியின் 168-ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பா் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இமயமலைக்குப் பயணமாகியுள்ளார் ரஜினி. ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்குச் சென்று தங்க திட்டமிட்டிருந்தார். ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்துக்குச் சென்றார். சென்னை திரும்பியதும் முதல் வேலையாக தர்பார் படத்தின் டப்பிங் வேலைகளை முடிக்கவிருக்கிறார். தர்பார் 2020-ம் ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...