எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருமணமான 2 ஆண்டுகளில் 10-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியர் இரண்டாம் ஆண்டு திருமண வாழ்க்கையை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) கொண்டாடினர்.

News image
சமந்தா நாக சைதன்யா
Updated On :31 ஜனவரி 2024, 10:18 am

Uma Shakthi

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியர் இரண்டாம் ஆண்டு திருமண வாழ்க்கையை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) கொண்டாடினர்.  

Story image

மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சமந்தா தனது கணவருக்காக ஒரு இதயப்பூர்வமான அன்பான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.

Story image

திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து, சமந்தா அதில் எழுதியுள்ளது: "வலுவாக, மேலும் வலுவாகத் தொடரும் உறவிது .. இரண்டு ஆண்டு நிறைவு இன்று ஆனால் இது பத்து ஆண்டின் கதை’ என்று பதிவிட்டுள்ளார்.

Story image

அதாவது இருவரும் காதலிக்கத் தொடங்கி, லிவ் இன் உறவில் இருந்து பின்னர் திருமணம் முடித்த வரையில் இந்தப் பயணம் அவர்களுக்கு இனியதாக இருக்கிறது என்று பொருள்படும்படி சாம் அந்தப் பதிவை எழுதியுள்ளார்.

Story image

மேலும் சமந்தா ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார், அதில் இருவரும் ஒரு பெப்பி பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம்.

Story image

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'ஏ மாயா செஸாவே’ என்ற படத்தில்தான் சமந்தாவும் சைதன்யாவும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.

Story image

பல ஆண்டுகளாக இந்த இணையர் டேட்டிங் செய்த பின்னர், கடந்த 2017-இல் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.