ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார். இந்தப் படம் நேற்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
வார் படம் வசூலில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் நாளிலேயே இந்தியா முழுக்க ரூ. 53.35 கோடி வசூலித்துள்ளது. அதாவது ஹிந்தியில் ரூ. 51.60 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.75 கோடியும் வசூலாகக் கிடைத்துள்ளன.
இதன்மூலம் முதல் நாளன்று இந்தியாவில் அதிகமாக வசூலித்த படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.
சல்மான் நடிப்பில் வெளியான பாரத் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 42.30 கோடி வசூலித்து இந்த ஆண்டு அதிகமாக வசூலித்த படம் என்கிற சாதனையைப் படைத்தது. இந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் அனைத்து மொழிகளிலும் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 53.10 கோடி வசூலித்து பெரிய சாதனையை நிகழ்த்தியது. அமீர் கான் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படம் முதல் நாளன்று ரூ. 52 கோடி வசூலித்து இந்தியாவில் முதல் நாளில் அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற சாதனையைப் படைத்தது.
இந்த அனைத்து சாதனைகளையும் வார் படம் தகர்த்து, இந்தியாவில் முதல் நாளன்று அதிகமாக வசூலித்த படம் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது. பலமான ஆக்ஷன் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்துள்ளார்கள். வரும் நாள்களில் வார் பட மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!

ரூ. 2000 கோடி வசூலித்த மைக்கல்!

பக்தித் தொடரில் நடிக்கும் விஜய் பட நாயகி!

மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


