பிக் பாஸ் புகழ் ஆரவ், ராதிகா நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்கிற சரண் இயக்கியுள்ள படம் இன்று வெளியாகியுள்ளது. வட சென்னை டான் ஆக ராதிகா இந்தப் படத்தில் நடித்துள்ளார். காவ்யா தபார், நிகேஷா படேல், யோகி பாபு, ரோஹிணி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சைமன் கிங்.
இந்நிலையில், சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு ஆரவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சினிமா பின்புலம் இல்லாமல் இருப்பதால் என்னால் கதாநாயகன் ஆகமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. பலர் முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளார்கள். மற்ற நடிகர்களின் பேனர்களைப் பார்த்து நானும் அந்த இடத்துக்கு வரவேண்டும் என எண்ணுவேன். கனவு நிஜம் ஆகும்போது சந்தோஷமாக உள்ளது. ஒரு நல்ல நடிகராகப் பல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும்.
இந்த வருட பிக் பாஸைக் கொஞ்சமாகப் பார்த்தேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் முதல் சீஸனில் அனுபவித்ததை விடவும் மன அழுத்தங்களை இந்தமுறை குறைவாகவே அனுபவித்துள்ளார்கள். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களிடம் இதுகுறித்துப் பேசியபோது, போட்டியாளர்களிடம் கடினமாக நடந்துகொள்வதற்குப் பயமாக உள்ளது, ஏனெனில் அவர்கள் தாங்குவார்களா எனத் தெரியவில்லை என்றார்கள். ஆனால், எங்களை வைச்சு செஞ்சாங்க. நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். 100 நாள்களைக் கடப்பதும் அதற்குப் பிறகு சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் சுலபமாக இல்லை. அங்கிருந்து வெளியே வரும்போது 10, 15 கிலோ எடையை இழந்திருந்தோம். இப்போது நிகழ்ச்சியின் தன்மை மாறிவிட்டது. இருந்தாலும் பிக் பாஸ் ஒரு நல்ல நிகழ்ச்சி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


