/

ஹரிஷ் கல்யாணின் புதிய படம்: டிரெய்லர் வெளியீடு!

ஜிப்ரான் இசையமைத்துள்ள தனுசு ராசி நேயர்களே படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :28 நவம்பர் 2019, 12:15 pm

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்துகொண்ட பிறகு ஹரிஷ் கல்யாணுக்குத் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகின்றன. கடந்த வருடம் இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி பெற்றதால் மேலும் கூடுதல் கவனம் பெற்றார். அதன்பிறகு இந்த வருடம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெளியானது. அடுத்ததாக தனுசு ராசி நேயர்களே வெளியாகவுள்ளது. இதற்கடுத்து, இயக்குநர்கள் சசி, சிம்புதேவன் படங்களில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். 

ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகன்கானா சூர்யவன்ஷி, யோகி பாபு நடிப்பில் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தனுசு ராசி நேயர்களே. நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் மகனான சஞ்சய் பாரதி இயக்கியுள்ள முதல் படம் இது. இசை - ஜிப்ரான். டிசம்பர் 6 அன்று வெளியாகவுள்ள தனுசு ராசி நேயர்களே படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.