இதற்குப் பிறகு வனிதாவின் வாழ்வில் மேலுமொரு ட்விஸ்ட்.. தன் அம்மாவின் சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டை விட்டு தன்னை தன் தந்தை விஜயகுமாரும், சகோதரர் அருண் விஜயும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். இதற்கு காவல்துறையினரும் உடந்தை என பகிரங்கமாக குற்றம் சாட்டி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்தார் வனிதா. வனிதா குறித்த எந்தக் கேள்விக்கும் விஜயகுமார் குடும்பம் பெரிதாக விளக்கம் அளிக்காமல் மெளனம் சாதித்தது. மொத்தக் குடும்பமும் வனிதாவின் செயல்களால் அவரை ஒதுக்கி வைத்தாற் போல நடந்து கொண்டது. ஆனால், வனிதா மட்டும் ஒன்வுமன் ஆர்மியாக தனக்கான நியாயங்களுக்காக தனித்துப் போராடிக் கொண்டே இருந்தார். ஆம், அவர் சளைக்காமல் யூ டியூப் சேனல்களுக்கும், ஊடகங்களுக்கும் தனக்கு தனது சொந்தக் குடும்பத்தால் நிகழ்த்தப்பட்ட அநியாயங்கள் அத்தனை குறித்தும் பகிரங்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.