ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இந்த வருடம் தயாரித்த மூன்று படங்களும் வெற்றியடைந்ததால் அதைக் கொண்டாடும் விதத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளும் வெற்றி விழா ஒன்று நடைபெறவுள்ளதாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2019-ம் ஆண்டில் வெளியான எல்.கே.ஜி, கோமாளி, பப்பி ஆகிய மூன்று படங்களும் மக்களின் பேராதரவு பெற்று வெற்றிப் படங்களாக அமைந்தன.
இதனைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள வெற்றி விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து, மூன்று திரைப்படங்களிலும் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்று படங்களின் வெற்றி விழா, வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


