டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நடிகர் விஜய் தலைமையில் டும் டும் டும் கொட்டவிருக்கும் முரளியின் மகன்!

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா விரைவில் நடிகர் விஜய்க்கு உறவினர் ஆகப் போகிறார் என்ற செய்தி சில மாதங்கள் முன் கோலிவுட்டில் உலா வந்தது

News image
atharva and akash
Updated On :31 ஜனவரி 2024, 1:05 pm

சினேகா

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா விரைவில் நடிகர் விஜய்க்கு உறவினர் ஆகப் போகிறார் என்ற செய்தி சில மாதங்கள் முன் கோலிவுட்டில் உலா வந்தது. அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தி.

இதயம் படப் புகழ் முரளியின் மூத்த மகன் அதர்வா. இவர் தந்தை வழியில் நடிப்பில் பிரபலமானார். இளைய மகன் ஆகாஷுக்கு நடிப்பை விட இயக்குனராவதில்தான் விருப்பம் இருந்தது. லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் சினேகா என்பவரை சந்தித்துள்ளார். இவர் 'விஜய் 64’ படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் மகள். 

2012-ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கினார் சினேகா. படம் சரியாக ஓடவில்லை. கல்லூரியில் சந்தித்த இந்த இணையரின் நட்பு காதலாக மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரியவர்களின் சம்மதம் கிடைக்க கால தாமதம் ஆகியிருக்கிறது. மேலும், அண்ணனுக்குத் திருமணம் முடிந்த பிறகுதான் தனக்கு என்று ஆகாஷ் கூறியிருந்ததும் மற்றொரு காரணம்.

இந்நிலையில் தற்போது இரு வீட்டாரின் சம்மதமும் காதலர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சினேகா, காதலர் ஆகாஷுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சேவியர் பிரிட்டோ விஜய்யின் உறவினர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்தத் திருமண நிச்சயதார்த்த விழாவை விஜய் சென்னை வந்தவுடன் நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர். விஜய் தற்போது தில்லியில் தளபதி 64 படப்படிப்பில் உள்ளார். அந்த ஷெட்யூல் முடிந்தவுடன், அவரது தலைமையில் சென்னையில் நிச்சயதார்த்தமும் அதன் பிறகு விரைவில் திருமணமும் நடைபெறவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.