'இயற்கை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாகக் கவனம் பெற்றவர் குட்டி ராதிகா.
2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் 'தமயந்தி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இப்படத்தை நவரசன் எழுதி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 'தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஹிந்தி, மலையாளம் மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. 'அருந்ததி', 'பாகமதி' ஆகிய படங்கள் போன்ற ஹாரர் திரில்லர் படம் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்பு கொண்டேன்.

அவருக்குத் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார்.
ஒரு முறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இரண்டு கால கட்டங்களில் நடக்கும் இக்கதை ஹைதராபாத், பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது' என்றார்.
இப்படத்தில் ரமேஷ் அரவிந்த், ரங்கயாணா ரகு, ரவி பிரசாத், சுசித்ரா பிரசாத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். குட்டி ராதிகா பெண் அகோரி வேடத்தில் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக நான்கு மணி நேரம் மேக் அப் போட்டுள்ளார். படத்தின் முக்கிய காட்சிகள் காசியில் படமாக்கம் செய்யப்பட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம என மும்முமொழ்யில் எடுக்கப்பட்ட தமயந்தி, இம்மாத இறுதியில் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


