ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பரமக்குடியில் தந்தை சிலையைத் திறந்து வைத்த கமல் ஹாசன் (படங்கள்)

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கமலின் குடும்ப உறுப்பினர்கள் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்கள்.

News image
Updated On :7 நவம்பர் 2019, 8:58 am

இன்று, நடிகர் கமல் ஹாசனின் 65-வது பிறந்தநாள்.

கமலின் 60 ஆண்டு காலத் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக அவரது பிறந்த நாளான இன்று முதல் முதல் மூன்று நாள்களுக்கு பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1959-ஆம் ஆண்டு 5 வயது சிறுவனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவா் கமல்ஹாசன். ‘களத்தூா் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு, திரையுலகில் இது 60-ஆவது ஆண்டு. நடிகா், இயக்குநா், தயாரிப்பாளா், வசனகா்த்தா, பாடலாசிரியா், நடன இயக்குநா் என பன்முகங்களை கொண்ட கமல், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலும் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறாா். தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளாா்.

இந்த நிலையில், இன்று தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கமல். வழக்கமாக தனது பிறந்த நாளில் நற்பணிகளைத் தொடங்கி வைத்து பேசும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாா். இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. இதில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகினா் பலரும் கலந்து கொள்கின்றனா். இதன் ஒரு பகுதியாகத் திரையுலகினா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார். இதில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகிகளும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கமலின் குடும்ப உறுப்பினர்கள் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்கள். சிலை திறப்பு விழாவில் சாரு ஹாசன், சுஹாசினி, ஷ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், பிரபு போன்றோர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் புகைப்படங்கள்:

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.