நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பரோட்டா சூரி உணவகத்தில் விஜய் சேதுபதி என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் சூரி,  அம்மன் என்கிற உணவகத்தை மதுரையில் 2017-ல் தொடங்கினார்.

News image
selfie with vijay sethupathi
Updated On :31 ஜனவரி 2024, 10:38 am

Snehalatha

நடிகர் சூரி,  அம்மன் என்கிற உணவகத்தை மதுரையில் 2017-ல் தொடங்கினார். அந்த உணவகத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் உற்சாகமாகி தற்போது அதே மதுரையில் இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார்.

மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் அம்மன் - சைவ உணவகம், அய்யன் - அசைவ உணவகம் என இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார். இந்த இரு கிளைகளையும் சூரியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் அண்மையில் திறந்து வைத்தார். 

இந்த உணவகத்தின் சுவை மக்களின் மனதைக் கவர்ந்துவிடவே, சூரியின் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் நடிகர் விஜய் சேதுபதி. 

உணவகத்துக்கு சாப்பிட வந்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை சூழந்து செல்ஃபி எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஃபோனை வாங்கி அவர்களுஅன் செல்ஃபி எடுத்துத் தந்தார் விஜய் சேதுபதி.

ஒரு ரசிகர் தன் உறவினருடன் விடியோ காலில் பேசுங்கள் என்று ஆசையாகக் கேட்கவே, அவரின் ஆசையையும் நிறைவேற்றினார். சூரிக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இரவு உணவையும் அங்கேயே சாப்பிட்டார் விஜய் சேதுபதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.