கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது.

பலமுறை தாமதமான இப்படத்தின் வெளியீட்டுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 29 அன்று எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'எனை நோக்கி பாயும் தோட்டா', மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன் சத்தமில்லாமல் இன்னொரு படத்தையும் இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் டைட்டில் ‘யோஹன்: அத்யாயம் ஒன்று’ என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அந்தப் படத்தில் டைட்டில் 'ஜோஷ்வா' என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வருண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ராஹய் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகர் வருண் ஐசரி கணேஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, அதாவது காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் குறித்த விவரங்கள் மற்றும் டீஸர் உள்ளிட்டவை பற்றி விரைவில் அறிவிப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


