இந்த ஆண்டு இறுதிக்குள் விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு விளம்பரப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தைக் கண்டித்து வணிகர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ‘மண்டி’ என்ற செயலியின் விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கஸ்டமராகவும் கடைக்காரராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பலசரக்கு சந்தையான மண்டியின் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்ததைக் கண்டித்து சில்லறை வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்களின் அறிக்கையில், 'சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளோம். நவம்பர் 04-ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலத்தை கொளத்தூர் த.ரவி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்' என்று அறிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய விஜய் சேதுபதியா இப்படி சிறு வியாரிகளுக்கு எதிராக செயல்படுவது, அது வெறும் நடிப்பா என்று நெட்டிசன்களும் கண்டித்து வருகின்றனர். உள்ளூர் வியாபாரி நிலை என்ன ஆக்கும் உங்கள் movie இனி ஆன்லைன் பார்க்கப்பட்டும் என்றும் கொதித்து எழுந்துள்ளார்கள். இதுவரை விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இதற்கான மறுப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


