லீலா கேரக்டருக்காக இயக்குனர் தேர்வு செய்து வைத்திருந்த லிஸ்ட்டில் நடிகை ரம்யா கிருஷ்ணனும், நதியாவும் இருந்திருக்கிறார்கள். நதியா இயக்குனரின் கடைசி சாய்ஸ். ஒருவேளை ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் நதியாவிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று நினைத்ததாகக் கூறும் இயக்குனர் படத்திற்கான வேலை தொடங்கியதும் முதலில் கமிட் செய்திருந்த ரம்யா கிருஷ்ணனை விட்டு விட்டு நதியாவை வைத்துத் தான் அக்காட்சிகளைப் படமாக்க முயன்றிருக்கிறார். ஆனால், பின்னர் இயக்குனர் தரப்பில் ஏதோ தடங்கல் ஏற்பட நதியாவை வைத்து எடுக்கப்பட்டிருக்க வேண்டிய லீலா கேரக்டர் கைவிடப்பட்டிருக்கிறது. பின்னர் நதியாவுக்குப் பதிலாக மீண்டும் ரம்யா கிருஷ்ணனையே அணுகியிருக்கிறார்கள்.