இயக்குனர் ராஜமெளலி இரு லெஜண்ட். அவரைப் போல அத்தனை பிரமாண்டத்தில் எந்த ஒரு இயக்குனராலும் ஒரு படத்தை திட்டமிட இயலாது. இந்தியத் திரையுலகில் பாகுபலி ஒரு லைஃப் டைம் சாதனை. அதன் களமே வேறு. அதை சாஹோவில் எதிர்பார்ப்பது எப்படிப் பொருந்தும். சாஹோவுக்கான ஜானரில் அதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படத்துக்காக நடிகர்களும் சரி, தொழில்நுட்பக் கலைஞர்களும் சரி மிகவும் மெனக்கெட்டிருக்கிறோம். என்னை விட ஹீரோ பிரபாஸூக்கு பட வெளியீடு குறித்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. சாஹோவை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள். எனவே படம் வெளிவருவதற்கு முன்பே அதைப் பற்றிய அனுமானங்களை வெளியிடுவதை பக்குவமற்ற தன்மையாகவும் பொருளற்ற விவாதமாகவும் காண்கிறேன் நான். படம் மிக நன்றாகவே வந்திருக்கிறது. பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பு இந்தப் படத்திற்கும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன் நான். படம் வெளிவந்தால் தெரிந்து விடப்போகிறது அதை மக்கள் எவ்வாறு ரிஸீவ் செய்கிறார்கள், அதற்கான வரவேற்பு என்ன என்று, அது வரையில் விமர்சகர்களும், ஊடகங்களும் சற்றுப் பொருக்கலாமே! என்ற ரீதியில் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார் சுஜீத்.