தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தர்பார் படத்தில் ரஜினியுடன் நடித்த ஜீவாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'.

News image
Updated On :26 ஜூன் 2019, 6:32 am

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

ரஜினி காவல் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார். பிரதீக் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர்கள் ராஜ் பப்பர், ஸ்மிதா படீலின் மகன் ஆவார்.  படத்தில் முக்கியமான வில்லன் அவர் இல்லை என்றாலும் அக்கதாபாத்திரம் படத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றனர் படக்குழுவினர்.

அண்மையில், திருநங்கை ஜீவா 'தர்பார்' படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை அறிந்த இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டரில் ஜீவாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். 

திருநங்கை ஜீவா, 'நன்றி சார், எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை' என இதற்கு பதில் அளித்துள்ளார். நெட்டிசன்கள் ஜீவாவிற்கு தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.