சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானும் அவரது மகன் ஆரியனும் தி லயன் கிங் படத்தின் இந்தி டப்பிங்கில் கிங் முபாசா மற்றும் அவரது மகன் சிம்பாவாக பின்னணி குரல் கொடுக்கிறார்கள். இது குறித்து ஷாருக்கான் கூறுகையில், 'எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் மிகவும் ரசிக்கும் படம் தி லயன் கிங், எங்கள் அனைவரின் மனம் கவர்ந்த மிகவும் மிகச் சிறந்த படம் இது.

ஒரு தந்தையாக, முஃபாசா தன் மகன் சிம்பாவுடனும் பகிர்ந்து கொள்ளும் அன்பான உறவையும் என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிகிறது. லயன் கிங்கின் மரபு என்பது காலமற்றது, மேலும் எனது மகன் ஆரியனுடன் மிகச் சிற்ப்பு வாய்ந்த இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. இளைய மகன் ஆப்ராம் இதைப் பார்க்கப் போகிறார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார் ஷாரூக் கான்.
டிஸ்னி இந்தியாவின் ஸ்டுடியோ என்டர்டெயின்மென்ட் தலைவர் பிக்ரம் துக்கல் கூறுகையில், 'லயன் கிங்கின் கிளாசிக் பதிப்பைக் கொண்டு வருவதன் நோக்கம் பரந்த பார்வையாளர்களை சென்றடைவற்காகத்தான்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'முபாசா மற்றும் சிம்பாவின் கதாபாத்திரங்களை இந்தியில் உயிர்ப்பிக்க ஷாருக்கானையும் அவரது மகன் ஆரியனையும் விட சிறந்த தேர்வை கற்பனை செய்து பார்க்க முடியாது' என்றார்.
அயர்ன் மேன் மற்றும் தி ஜங்கிள் புக் ஆகிய படங்களை இயக்கிய ஜான் பாவ்ரூ இப்படத்தை இயக்குகிறார். டிஸ்னியின் தி லயன் கிங்கின் ஜூலை 19-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
லயன் கிங் ரசிகர்கள் இத்திரைப்படத்துக்காக காத்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வெளியான தினத்திலிருந்து இன்றுவரை பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்று வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீல்சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த முதியவர்கள் அவதி!

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!

இது சினிமா ஷூட்டிங் அல்ல; வாக்குச் சாவடி! சிம்ரன் பதிவு

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


