எனக்கும், வனிதா விஜயகுமாருக்குமிடையிலான உறவு என்பது ஒரு நடிகர் கம் நடன இயக்குனருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்குமிடையிலான உறவு மட்டுமே தான். வனிதாவுக்கு எப்போதுமே பப்ளிசிட்டி ரொம்பப் பிடிக்கும். நாங்கள் ‘எம் ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது படத்தின் புரமோஷனுக்காக நிறைய ஸ்டில்கள் எடுத்தார்கள். அதில் பல ஸ்டில்கள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டாற் போன்ற தோற்றத்தில் எடுக்கப்பட்டிருந்தன. படத்திற்காகத்தானே என்று நான் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நேர்காணல்களில் எங்களது ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி வந்த போது வனிதா ஆமாம் எனும் தொனியில் பதில் சொல்லவே, நான் பதறிப்போய், என்ன மேடம் இது? என்று கேள்வி கேட்கத்தான் செய்தேன். அதற்கு வனிதா, படத்தின் புரமோஷனுக்கு இதெல்லாம் தேவை. அப்போது தான் நம் படத்தைப் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று சொல்லிவிட்டார். என் மனைவி என்னைக் கேள்வி கேட்டு திட்டத்தான் செய்தார். நடந்தது இது தான். மற்றபடி எங்களுக்கிடையில் வேறு எந்தவிதமான நட்பும் இல்லை. அவர் தயாரிப்பாளர். நான் அவரது படத்தில் பணிபுரிந்தேன். அவ்வளவு தான். என்கிறார் ராபர்ட்.