ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீஸன் 3 க்கு பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். ஒவ்வொரு சீஸனின் போதும் இது வாடிக்கை தான். பார்வையாளர்கள் மட்டும் கூடுவதில்லை நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துப் பகிரல்களும் அதிகரித்துக் கொண்டே செல்வதென்பது பிக்பாஸ் சீரிஸ்க்கு வழக்கமான ஒன்றே. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பொருத்தமட்டில் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் நிகழ்ச்சி குறித்த கருத்துக்கள் இருக்கும். ஆனால், எல்லா நிகழ்ச்சிகளிலும் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பொதுவெளியில் பகிர முன் வர மாட்டார்கள். ஆனால் பிக்பாஸ் மட்டும் அதற்கு விதிவிலக்கு. பெரிய பெரிய கார்ப்பரேட் அதிகாரிகள், நடிகர், நடிகைகள், ஆசிரியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் எனச் சகலரும் தங்களது கருத்துக்களைச் சரமாரியாகப் பகிர விரும்புவது இந்த ஒரே ஒரு ஸ்பெஷல் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மட்டும் தான்.