/

ஐ லவ் தெலங்கானா: என்கவுன்டர் நடவடிக்கைக்குத் திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு!

சமந்தா, விஷால், ஹன்சிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் காவல்துறையின் இந்த என்கவுன்டர் நடவடிக்கைக்குத் தங்கள் கருத்துகளை...

News image
Updated On :6 டிசம்பர் 2019, 6:01 am

ஹைதராபாதைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர், கடந்த வியாழக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் லாரி பணியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். நால்வருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த சட்டன்பள்ளிக்கு குற்றவாளிகள் நால்வரும் காவலர்களால் இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நால்வரையும் காவலர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றார்கள். இச்சம்பவம் நாடு முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளும் விமரிசனங்களும் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் சமந்தா, விஷால், ஹன்சிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் காவல்துறையின் இந்த என்கவுன்டர் நடவடிக்கைக்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.