தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.
கடந்த ஏப்ரல் மாதம், பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அடைந்தது. ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியது. இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது. தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன் பார்வைகளும் அப்போது பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைச் சுலபமாகத் தாண்டியது ரெளடி பேபி பாடல். தற்போது இந்தப் பாடலுக்கு யூடியூபில் 72 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7-ம் இடம் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


