/

சென்னையில் நடைபெறவுள்ள ‘தர்பார்’ பாடல் வெளியீட்டு விழா

டிசம்பர் 7 அன்று தர்பார் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது... 

News image
Updated On :4 டிசம்பர் 2019, 11:57 am

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடித்துள்ள 167-வது படம். ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடித்துள்ளார். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் டிசம்பர் 7 அன்று தர்பார் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.