டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்! பிரபல நடிகர் சொன்ன காரணம்!

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தன் அடுத்த படமான ‘அவனே ஸ்ரீமன்னாராயணா’ டிசம்பர் 27 அன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பன்மொழியில் வெளியிடவுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:23 pm

சினேகா

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தன் அடுத்த படமான ‘அவனே ஸ்ரீமன்னாராயணா’-வை டிசம்பர் 27 அன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பன்மொழியில் வெளியிடவுள்ளார். தர்பாரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக தான் அணுகப்பட்டதாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் ‘அவனே ஸ்ரீமன்னாராயணா’ பட வேலைகளில் இருந்ததால்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

Story image

‘அவனே ஸ்ரீமன்னாராயணா’ படத்தின் திரைக்கதையிலும் ரக்‌ஷித் பங்கேற்றுள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருந்ததால் தர்பாரில் தன்னால் நடிக்க முடியாது என்று ரக்‌ஷித் கூறியுள்ளார். விரைவில் ரஜினிகாந்துடன் வேறொரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

Story image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் தர்பார் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தரின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் செய்துள்ள இந்தப் படத்திற்கான டப்பிங்கை அண்மையில் ரஜினி முடித்தார். ரஜினியினி ‘தர்பார்’ 2020-ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.