தெலுங்கில் தயாராகி வரும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் சிரஞ்சீவி, நயன் தாராவுடன் மேலும் பல பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் பிரபலங்களும் இணைந்து நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே! ஆந்திராவைச் சேர்ந்த விடுதலைப்போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் நரசிம்ம ரெட்டியாக நடித்துக் கொண்டிருப்பது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவருக்கு ஜோடி நயன்தாரா. இவர்களைத் தவிர இத்திரைப்டத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியான செய்தி.