நடிகர் விஷால் மற்றும் அனிஷா அல்லா இருவருக்கும் மார்ச் 16-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூரில் நிச்சயதார்த்தத்தம் விமரிசையாக நடந்தது. தெலுங்கு நடிகை அனிஷா அல்லா, ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டி மற்றும் பத்மாஜாவின் மகள். இவ்விழாவில் விஷால் ஷெர்வானி உடையில் தோற்றமளித்தார், அனிஷா வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் புடவை அணிந்தார். இந்த ஜோடி மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவர் மீது ஒருவர் மிகவும் காதலுடன் இருந்ததனர் என்பது நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் பார்த்தாலே தெரியும்.
நிச்சயதார்த்தம் முடிந்த பின், இருதரப்பிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமண ஏற்பாடுகள் விரைவாக விஷால் வீட்டில் தொடங்கியது. இரண்டு குடும்பங்களும் கலந்து திருமணத் தேதியை முடிவு செய்தனர். அக்டோபர் 9-ம் தேதி இந்த ஜோடிக்கு திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 9-ம் தேதி திருமணம் நடைபெறும் என்று விஷாலும் தெரிவித்தார்.
இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, தம்பதியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திருமணம் உறுதியான ஆறு மாதங்களுக்குள் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் இதுவரை இல்லை, ஆனால் அனிஷா மற்றும் விஷால் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனிஷா சமூக ஊடகங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அவரது முன்னாள் காதலருடன் பி.டி.ஏ புகைப்படங்களை (PDA Photos) பதிவிடுவதில் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. பிடிஏ என்றால் Public display of Affection. அதாவது ஒருவர் மீதான அன்பை புகைப்படங்களில் வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டாமல் இருப்பது, அதை சமூக வலைத்தளங்களில் எவ்வித தயக்கமின்றி பதிவிடுவதும் ஆகும். முன்னாள் காதலரின் புகைப்படங்களை எதற்காக அனிஷா பதிவிடுகிறார் என்பது கேள்விக்குள்ளானது.
அதிர்ச்சியூட்டும் வகையில், அனிஷா விஷாலுடனான சேர்ந்து எடுத்த படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதளங்களிலிருந்து நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரியில் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தத்தில் மோகன்லால், சூரியா மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஷால் அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


