தபாங் படத்தொடரின் 3-ம் பாகம் மூலமாக மீண்டும் இணைந்துள்ளார்கள் சல்மான் கானும் பிரபுதேவாவும். 2010-ல் வெளியான தபாங் படத்தை அனுராக் காஷ்யப்பும் தபாங் 2 படத்தை அர்பாஸ் கானும் இயக்கினார்கள். 53 வயது சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 படத்தைத் தற்போது இயக்கி வருகிறார் பிரபுதேவா.
10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். கடைசியாக 2015-ல் சிங் ஈஸ் பிளிங் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கினார் பிரபுதேவா. இதன்பிறகு விஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நான்கு வருடத்துக்குப் பிறகு ஹிந்திப் படம் இயக்க மீண்டும் களமிறங்கியுள்ளார்.
தபாங் 3 படம் ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று வெளியாகவுள்ள இந்தப் படம் - ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால்... தேர்தல் செலவை ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


