'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார்.

இந்தியன் 2- வில் ஒரே ஒரு கமல்ஹாசன்தான். அதுவும் வயதான தோற்றத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனின் பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
முதல் பாகத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு அண்மையில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர், இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகிழ்ச்சியை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, 'இந்த பெரிய சந்தோஷமான விஷயம் இப்போது சிறிது காலமாக என்னை உற்சாகப்படுத்தி வருகிறது. நான் பிரபஞ்சத்தை நம்புகிறேன், உங்கள் செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதை எல்லாம் பிரபஞ்சம் உங்களுக்குத் தருகிறது. ஆனால் கமல் சாருடனும், எனக்குப் பிடித்த நடிகரான சித்தார்த் உடனும், க்வீன் படத்தில் நடக்கும் அரசி காஜல் அகர்வாலுடனும் நடிப்பேன் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. அதிலும் ஷங்கர் சாரின் இயக்கம் என்றால் அது மிகப் பெரிய ஆசிர்வாதம். அனிருத் இசை பற்றி கூடுதலாக சொல்லவும் வேண்டுமா? ஒரே நேரத்தில் அல்லா ஆசிகளும் எனக்குக் கிடைத்துவிட்டதைப் போல உணர்கிறேன்.' என்று பிரியா பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


