எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சாய்னா நேவாலாக நடிக்கிறார் பரினிதி சோப்ரா!

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று படத்தில் சாய்னாவாக நடிக்கும் பரினிதி சோப்ரா,

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:42 am

DIN

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று படத்தில் சாய்னாவாக நடிக்கும் பரினிதி சோப்ரா, பேட்மின்டன் பயிற்சி பெறுவதோடு, பேட்மின்டன் ஆடுபவர்களின் உடல்திறன் எப்படியிருக்க வேண்டுமோ அதன்படி தன் உடல் எடையையும் குறைத்து கை மற்றும் கால்கள் தசைகளும் வலுவாக இருக்கக் கூடிய பயிற்சி பெற்று வருகிறாராம். பயிற்சியின் போது அடிக்கடி காயங்கள் ஏற்பட்டாலும் நடிக்கும் பாத்திரம் சிறப்பாக அமைய வேண்டுமென்பதற்காக உணவு கட்டுப்பாட்டையும் கடை பிடிக்கிறாராம்.

Story image

1920- ஆம் ஆண்டு வெளிநாட்டு பிரஜைகளான ஐந்து பஞ்சாபி வாலிபர்கள் இந்தியாவுக்கு வந்து பிரிட்டி ஷாரை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து "மிட்டி விரஸாத் பாப்பரன் தி' என்ற தலைப்பில் நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினி பஞ்சாபி மொழியில் படமொன்றை தயாரித்துள்ளார். "இன்றைய தலைமுறையினர் இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளவும். உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் இப்படம் அமையும்'' என்று கூறியுள்ள ஹேமமாலினியின் கணவரும் நடிகருமான தர்மேந்திரா ஒரு பஞ்சாபி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.