எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நோட்டா படத்தில் முதன் முறையாக நடிக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நோட்டா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பதன் மூலம் நடிகராக மாறியுள்ளார் என்பது தான் கோலிவுட்டின் அண்மைய வைரல் செய்தி.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:45 pm

உமாகல்யாணி

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நோட்டா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பதன் மூலம் நடிகராக மாறியுள்ளார் என்பது தான் கோலிவுட்டின் அண்மைய வைரல் செய்தி. ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது விஜய் நடிப்பில் சர்கார் என்ற படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் சர்கார் பட வேலைகளுக்கு இடையே தனது உதவி இயக்குநரான ஆனந்த் சங்கரின் நோட்டா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் ஏ. ஆர். முருகதாஸ். ஏற்கனவே, கோலிவுட்டில் பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், எஸ்.ஜே.சூர்யா, பார்த்திபன், சேரன், கெளதம் வாசுதேவ் மேனன் என இயக்குநர்கள் நடிகராகவும் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்துள்ளார். அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நோடாவில் நடித்துள்ளார். இது தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகியுள்ளது. நடிகராகவே இப்படத்தில் முருகதாஸ் நடிக்கிறார் என்கிறது படக்குழு.

Story image

தனது குருநாதருடன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனந்த் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் என் இயக்குநரை இயக்கும் இந்த அற்புதமான தருணத்தில் மகிழ்ச்சியடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.