பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் நானா படேகர் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று எனது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தனுஸ்ரீ தத்தாவுக்கு சட்ட ரீதியிலான நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்த நடைமுறைகள் முடியும் வரை இந்த வழக்கு தொடர்பாக என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. 10 வருடங்களுக்கு முன்பு சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன். உண்ணை மாறாது" என்றார்.
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நானா படேகர் கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற திரைப்படப் பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ புகார் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு இந்த விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது சிலர் மட்டும், சட்ட ரீதியில் நானா படேகருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து, மும்பை (மேற்கு) ஓஷிவாரா காவல் நிலையத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சாமி சித்திக், இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மன் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரது பெயரையும் அவர் இணைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


