‘காதலே காதலே' பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்: 96 படம் பற்றி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!
96 படம் என்னை மிகவும் அசத்திவிட்டது...


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் கூறியதாவது:
என்ன ஓர் அருமையான படம் - 96. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னைக் கவர்ந்த பாடல், காதலே காதலே. என்ன ஒரு பாடல். இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையையும் ரசித்தேன். இசையையும்தான்.
சமீபகாலமாக விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகனாக உள்ளேன். ஆனாலும் 96 படம் என்னை மிகவும் அசத்திவிட்டது.
கோவிந்த் வசந்தாவின் அருமையான பாடல்கள். காதலே காதலே பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.
வாஷிங்டன் சுந்தர், முகுந்த், பாசு ஷங்கர் ஆகியோரும் இந்தப் படத்தின் மிகப்பெரிய ரசிகர்கள். அஸ்வின், நீ எப்படி என்று 96 படம் பற்றி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...