மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விஜய்க்கு 175 அடி கட் அவுட்: சர்கார் பட வெளியீட்டைக் கொண்டாடும் கேரள ரசிகர்கள்!

இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரத்தில் கட் அவுட் வைத்ததில்லை என்று...

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:13 pm

எழில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 

நவம்பர் 6 அன்று சர்கார் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு நிகராக கேரளாவிலும் சர்கார் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேரளா - கொல்லம் பகுதியைச் சேர்ந்த கொல்லம் நண்பன்ஸ் என்கிற விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் சர்கார் பட வெளியீட்டுக்காக விஜய்க்கு 175 அடி கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரத்தில் கட் அவுட் வைத்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் பல திரையரங்குகளில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் சர்கார் படத்தைத் திரையிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது தினமும் 8 காட்சிகள். இதையடுத்து கேரளாவில் வசூலில் சர்கார் படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.