எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நடிகர் அர்ஜுன் மனைவியை பிரிந்தது ஏன்?

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், அவரது மனைவி மெஹர் ஜெசியா இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:09 pm

ராக்கி

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், அவரது மனைவி மெஹர் ஜெசியா இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். இருவருக்குமிடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை நிலவி வந்தது எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. தற்போது தாங்கள் பிரிவதாக இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.

Story image

அர்ஜுன் ராம்பல், மெஹர் ஜெசியாவுக்கு மஹிகா, மயிரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் இத்தம்பதியினர் பிரிந்துவிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. உறவால் பிரிந்துவிட்டாலும் எங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறையாக இருப்போம். அவர்களுக்கான விஷயங்களில் சேர்ந்து முடிவு எடுப்போம், திருமண உறவு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர எங்களிடையே உள்ள அன்பு அல்ல’ என்று தெரிவித்துள்ளார் மெஹர்.

அர்ஜுன் ராம்பலுக்கும், பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் தான் அவரின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றுவிட்டது என்கிறது பாலிவுட் மீடியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.