ஆர்யாவின் முதல் கன்னடப் படத்தின் ஸ்டில் இது. அந்தப் படத்தின் பெயர் ‘ராஜரதா’. சாண்டல்வுட்டின் முக்கியமான இயக்குநராக வளர்ந்து வரும் அனுப் பண்டாரியின் இரண்டாவது படம் இது. 2015-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘ரங்கி தரங்கா’, திரை விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றதுடன் விருதுகளையும் குவித்தது.

‘ரங்கி தரங்கா’ படத்தின் கதாநாயகனான நிரூப் பண்டாரி, இயக்குநர் அனுப் பண்டாரியின் தம்பி ஆவார். 2016-ம் ஆண்டு காவிரிப் பிரச்னையின் போது கே.பி.என் பேருந்து நிறுவனத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இன வெறியர்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து ‘ராஜரதா’ படத்தின் கதை உருவாகியது. இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நம்ம ஊர் ஆர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தாதாவாக நடித்து அசத்தியுள்ளார் ஆர்யா.

இந்தப்படம் ராஜரதம் என்று தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது. மலையாளத்தில் மோகன் லாலுடன் தி க்ரேட் ஃபாதர் எனும் படத்தில் கெத்தான போலீஸாக நடித்துள்ளார் ஆர்யா. தமிழில் அதிகப் படங்கள் நடிக்காவிட்டாலும் பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்துவதும், எங்க வீட்டு மாப்பிள்ளை போன்ற சானல் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் என செம பிஸியாகவே இருக்கிறார் ஆர்யா.
அண்மையில் வெளியான கஜினிகாந்த் ட்ரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினரின் கவனம் பெற்று பரவலான பாராட்டுக்களை பெற்று வருகிறது. அடுத்து சந்தனத் தேவன் மற்றும் சங்கமித்ரா ஆகிய படங்களில் நடிக்கிறார் ஆர்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


