எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நடிப்பில் மட்டுமல்ல விலை அதிகமான கைப்பைகளை வாங்கிக் குவிப்பதிலும் போட்டிதான்! தீபிகா படுகோன் Vs பிரியங்கா சோப்ரா!

தற்போது பாலிவுட் நடிகைகளில் சர்வதேசப் புகழ் பெற்றவர்கள் இரண்டு நடிகைகள்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:36 pm

ராக்கி

தற்போது பாலிவுட் நடிகைகளில் சர்வதேசப் புகழ் பெற்றவர்கள் இரண்டு நடிகைகள். திப்பி எனச் செல்லமாக அழைக்கப்படும் தீபிகா படுகோன் மற்றும் பிக்கி சாப்ஸ் என்ற பட்டப் பெயருடன் வலம் வரும் பிரியங்கா சோப்ரா தான் அவர்கள். 

தமிழ்த் திரையுலகில் அந்தக் காலத்தில் வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைபப்டத்தில், பத்மினி மற்றும் வைஜெயந்தி மாலா ஒரு பாடலில் போட்டி நடனம் ஆடும் போது, வில்லனான வீரப்பா 'சபாஷ் சரியான போட்டி'! என்பார்.

Story image

காலத்தைத் தாண்டிய அந்த வசனம் சில நடிகைகளுக்குச் சாலப் பொருந்தும்.  பாஜிராவ் மஸ்தானி படத்தில் தீபிகா மற்றும் பிரியங்காவின் அழகிய நடனமும் பாலிவுட் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது.

Story image

தற்போது இவர்கள் பாலிவுட்டே புருவம் உயர்த்திப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். அதுவும் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் நடித்த பின்னர் தீபிகா படுகோனின்  நட்சத்திர அந்தஸ்த்து ஏகத்துக்கு உயர்ந்து விட்டது. தீபிகா தனது முதல் படமான ‘xXx: The Return Of Xander Cage’  நடிக்கத் தொடங்கியுள்ளார். இதில் அவருக்கு ஜோடி ஹாலிவுட் நடிகர் வின் டீஸல்.

Story image

பிரியங்காவும் தீபிகாவுக்கு மாற்று குறைந்தவரல்ல.  ஹாலிவுட்டுக்கு 'பேவாட்ச்' மூலம் முதலில் நுழைந்தவர் பிரியங்காதான். ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரான குவாண்டிகோவிலும் நடித்து ஹாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.

Story image

தீபிகாவும் சரி பிரியங்காவும் சரி இருவருமே ஹாலிவுட்டில் சர்வதேச புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயங்குவதில்லை.

Story image

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பிரியங்காவும், கான்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தீபிகாவும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இருவரும் வெளிநாட்டு பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் அதிகபட்ச க்ளாமராக இடம்பெற்றுள்ளனர். இருவருமே தங்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து வருபவர்கள்.

Story image

இருவரும் இப்படி போட்டா போட்டி கொண்டிருக்க, அபூர்வமாக ஒரு ஒற்றுமையும் உள்ளது. அது என்னவென்றால் இருவரும் கைப்பைகளை (hand bag) வாங்கிக் குவிப்பதில் பேர் போனவர்கள். பிரியங்கா எங்கு சென்றாலும் தனக்கு பிடித்தமான பிராண்டில் ஒரு கைப்பையை வாங்கிவிடுவார். தீபிகாவுக்கும் அந்த பித்து அதிகமுண்டு. 

Story image

தீபிகாவுக்கு க்ரொக்கடைல் பிராண்ட்தான் மிகவும் பிடிக்கும். அதிலும் கருப்பு நிற க்ரொக்கடைல் ஹேண்ட்பேகுடன் அடிக்கடி காணப்படுவார். கடைசியாக அவர் வாங்கிய லெதர் க்ரொக்கடைல் கைப்பையின் விலை என்ன தெரியுமா? இரண்டு லட்சத்து இருபத்தி நான்காயிரம்தான்! (Rs 2, 24, 000).

Story image

பிரியங்கா சளைத்தவரா என்ன? தீபிகாவை முறியடிக்க அவர் வாங்கிய ஒரு கைப்பையின் விலை ஜஸ்ட் மூன்று லட்சத்து அறுபதாயிரம்தான் (Rs 3, 60, 000). 

Story image

பிரியங்கா தற்போது குவாண்டிகா ஷூட்டிங்கில் பங்கேற்க ஐயர்லாந்த் பறந்துவிட்ட நிலையில், தீபிகா தற்போது விஷால் பரத்வாஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப் போன நிலையில் சொந்த வாழ்க்கையில் பிஸியாக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.