சமந்தா, ராம்சரண் தேஜா நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவெங்கும் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ரங்கஸ்தலம்’. இப்படத்தின் இயக்குனர் சுகுமார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரங்கம்மா, மங்கம்மா’ பாடல் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரல் ஹிட்டான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இணையாகத் தற்போது இணையத்தில் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டு பலமுறை பகிரப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் 1980 களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் பீரியட் திரைப்படங்களில் ஒன்று என்றொரு தகவலிருக்கிறது. அது உண்மையா? வதந்தியா? எனப் படம் வெளிவந்தால் தெரியும்.