/

ரஜினி நடித்துள்ள காலா பட வெளியீடு குறித்து லைகா புதிய அறிவிப்பு!

படத்தின் வெளியீடு, தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்த் திரையுலகத்தின் வேலை நிறுத்தத்தால் தள்ளிப்போகும் சூழல் உள்ளதாக...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:32 pm

எழில்

அரசியல் களத்துக்கு தயாராகி வரும் ரஜினியின் நடிப்பில் அடுத்து வரவுள்ள படம் காலா. கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், 'காலா' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வெளியீடு, தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்த் திரையுலகத்தின் வேலை நிறுத்தத்தால் தள்ளிப்போகும் சூழல் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவல்களை லைகா நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியதாவது:

காலாவின் வெளியீடு தொடர்பாக லைகா நிறுவனம் யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதன் வெளியீட்டுத் தேதி தொடர்பான ஊகங்களுக்கு லைகா நிறுவனம் பொறுப்பேற்காது என்று ட்வீட் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.