எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புலியையும் தாமரையையும் தனது உடலில் டாட்டூ போட்டுக்கொண்ட பிரபல நடிகை!

1994-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் இதுவரை திருமணம் செய்து

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:32 pm

ராக்கி

1994-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தமிழில் நாகார்ஜுனாவுடன் ரட்சகன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார். 41 வயதிலும் இளமையாக காணப்படும் சுஷ்மிதா சென், தன் உடலழகைப் பராமரிப்பதில் அதிக ஆர்வமுடையவர். அண்மையில் ஜிம்மில் ஆப்ஸ் வொர்க் அவுட் (Abs Work out) செய்த போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அவை சில மணி நேரத்தில் அது வைரலானது.

Story image

தற்போது தனது முதுகின் கீழ்ப் பகுதியில் டாட்டூ போட்டுக் கொண்டதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா சென். தாமரை மலர் மீது புலித் தலை இருப்பதாக ஒரு டிசைன் அது. ‘என் முதுகில் வரைந்துள்ள டாட்டூ இதுதான் (என்ன டாட்டூ என்று கேட்டவர்களுக்காகவே). என்னுடைய உடல் இந்தத் தாமரை மலரைப் போல மென்மையானது. ஆனால் மனம் புலியை விட ஆக்ரோஷமானது. நீங்கள் என்னில் எந்தப் பகுதியை பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்து எனது நிலைப்பாடு மாறுபடும். அவன் எனது முதுகில் விழிகளை விரித்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்!  என்னுடைய பிரத்யேகமான புகைப்படமான இதனை இங்கு பகிர்கிறேன். லவ் யூ கய்ஸ்!’ என்று புகைப்படத்தின் வரலாறை தெளிவாக விளக்கியிருக்கிறார் சுஷ்மிதா சென். ஏற்கனவே தன் கையில் I am என்று டாட்டூ போட்டவர் இவர், ஒரு டாட்டூ பிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story image

வழக்கம் போல சுஷ்மிதாவின் இந்தப் புலி டாட்டூ பதிவுக்கு 1,58,152 லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் பாராட்டுரைகளும் குவிந்து வருகிறது. அவருடைய புகைப்படமும் தன்னுடல் சார்ந்து அவர் கூறிய விஷயங்களும் இன்ஸ்டாகிரிமிஸ்டுகளிடையே (நெட்டிசன்களில் எலைட் பீப்பிள்) வைரலாகி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.