எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நடிகை ஸ்ரேயாவுக்கு உண்மையிலேயே ரகசியத் திருமணம் நடந்ததா?

நடிகை ஸ்ரேயாவுக்கும், அவரது காதலர் ஆண்ட்ரி கோஷெவிற்கும் மும்பையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரகசியத் திருமணம் நடைபெற்றது

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:30 pm

ராக்கி

நடிகை ஸ்ரேயாவுக்கும், அவரது காதலர் ஆண்ட்ரி கோஷெவிற்கும் மும்பையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரகசியத் திருமணம் நடைபெற்றது என்று ஊடகங்களில் பரபரப்பான செய்து வந்தது. ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவ்-க்கும் மார்ச் 17, 1, 19 ஆகிய தேதிகளில் திருமணம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், ஒருவாரம் முன்னதாக மார்ச் 12-ம் தேதியன்றே ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரேயா. இந்தியில் த்ரிஷ்யம் (பாபநாசம் ரீமேக்) படத்தில் அஜய் தேவ்கனுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஸ்ரேயா நடித்துள்ள புதிய படமான 'நரகாசூரன்' திரைக்கு வரவுள்ளது. 

ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக ஊடகத்தில் தகவல்கள் வெளியானது. அவரது ருஷ்யக் காதலர் ஆண்ட்ரி கோஷெவை மார்ச் மாதம் மணக்கவிருப்பதாக செய்திகள் வெளியான போது, ஸ்ரேயாவின் அம்மா இதனை மறுத்து தனது மகள் தோழியின் திருமணத்துக்காகத் தான் வந்துள்ளார் என்று மறுப்பு தெரிவித்தார்.

அண்மையில் மும்பை லேகன்வாலாவில் உள்ள அவரது வீட்டில் கடந்த மார்ச் 12-ம் காதலர் ஆண்ட்ரி கோஷெவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா என்ற தகவல் வந்தது. இந்த நிகழ்வில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இருந்தனர் என்றும் தெரிய வந்தது. ஆனால் ஸ்ரேயாவின் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை. 

Story image

தற்போது இவர்களது திருமண நிகழ்வுகள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து திருமணத்துக்கு பிந்தைய நிகழ்வுகள் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் திட்டமிட்டப்படி நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பத்து நாட்களாக ட்விட்டரில் ஸ்ரேயா எந்தப் பதிவும் போடாமல் இருந்து வருகிறார். திருமண பிஸியில்தான் அவர் சமூக வலைதளங்கள் பக்கம் வரவில்லை என்கிறார்கள். ஆனால் அது தனது திருமணமா அல்லது தோழியின் திருமணமா அல்லது ஊடகப் பரபரப்புக்காக வெளியிடப்பட்ட செய்தியா என விரைவில் ஸ்ரேயாவே அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.