திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

யார் எனது உண்மையான நண்பர்கள் என கண்டுகொண்டேன்! சிகிச்சை வெற்றிக்குப் பிறகு அமிதாப் பச்சனின் பதிவு!

அமீர் கான் நடிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் தயாராகி வரும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படத்தில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

உமாகல்யாணி

அமீர் கான் நடிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் தயாராகி வரும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். அதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்று வரும் படிப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் சென்றபோது உடல் நலிவுற்றார். இது அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. மருத்துவ குழு உடனடியாக விரைந்து அவருக்கு முதலுதவி அளித்தபின் சற்று உடல் நலம் தேறினார். அவரது மனைவி ஜெயா பச்சனும் இது குறித்து நேற்று விளக்கமளித்தார் '

Story image

அமிதாப் நலமாக உள்ளார். முதுகு வலி, கழுத்து வலி அவருக்கு உள்ளது. படத்துக்காக அணிந்த ஆடைகள் எடை கூடுதலாக இருந்ததால் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. மற்றபடி அவர் நலமாக உள்ளார்’ என்று கூறினார்.

Story image

தனது ட்வீட்டுகளுக்கு நம்பர் தரும் வழக்கம் அமிதாப்புக்கு உண்டு. தனது T 2742-வது ட்விட்டர் பதிவில் அவர் கூறியது, ‘வலி தாங்க முடியாமல் போனதால் மருத்துவர்களை அழைத்து உடல் நலத்தை சரி செய்ய வேண்டியதாகிவிட்டது. சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். இதனால் யார் எனக்கு உண்மையிலேயே நெருக்கமானவர்களை எனத் தெரிந்துகொண்டேன்’ என்று பதிவிட்டுள்ளார். உடல் நலம் மேம்பட்டவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அமிதாப். இந்தப் படத்துக்காக இரவு பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அமிதாப். ஏற்கனவே கடுமையான கழுத்து மற்றும் தோள்பட்டை வலி அவருக்கு இருந்தபடியால், அவர் படத்துக்காக அணிந்த கனத்த உடைகள் அவருக்கு அசெளரியமாகி வலியை அதிகரித்துவிட்டது. சிகிச்சைக்கு பின் தற்போது தேறி வருகிறார் பிக் பி. இன்னும் சில நாட்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடிந்துவிடுவோம் என்றனர் படக்குழுவினர்.

Story image

மிகப் பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்பட்டுவரும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.