டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், மலையாள திரை ரசிகர்களையும் கவர்ந்த படமான அர்ஜுன் ரெட்டியில் நடித்துப் புகழ் பெற்றவர். நாக் அஸ்வின் இயக்கத்தில், தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’யிலும் விஜய் நடித்து வருகிறார். இவர் அடுத்து நடிக்கவுள்ள நேரடி தமிழ்ப் படம்தான் ‘நோட்டா’. அர்ஜுன் ரெட்டி' படப் புகழுக்குப் பிறகு தமிழில் நேரடியாக நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. #KollywoodWelcomesVijayDeverakonda எனும் ஹாஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் விஜயை தமிழுக்கு வரவேற்றனர்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மெஹ்ரீன் நடிக்கவுள்ளார். இவர் 'நெஞ்சில் துணிவிருந்தால் எனும் படத்தில் அறிமுகமானார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் மகள் சாந்தா ரவி கே.சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஷான் கருப்புசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் கருப்பசாமியின் புகழ்ப் பெற்ற கதையான வெட்டாட்டம் என்ற நாவலைத் தழுவி இப்படத்தின் கதையை அமைத்துள்ளனர்.
இது ஒரு முழுநீள அரசியல் படம் என்பது தலைப்பிலேயே தெரிந்து கொள்ளலாம். இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நோட்டா அவரது மூன்றாவது படமாகும். இப்படத்தின் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா, வாக்களித்த மையுடன் நடுவிரலைக் காட்டியிருப்பது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


