திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

'இது மனசாட்சியற்ற செயல்’2.0 பட டீஸர் லீக்கானது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம்!

ரூ. 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை

News image
Updated On :4 மார்ச் 2018, 11:04 am

ரூ. 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும், முத்துராஜ் கலை இயக்குநராகவும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும், ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளதால், இத்திரைப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீஸர் இணைய தளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீஸரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. இப்படி தொடர்ந்து படங்களின் டீஸர்களை அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் செய்வது முறையல்ல. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

டீஸர் லீக்கானதற்கு நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதில் அதிகாரபூர்வமாக 2.0 படத்தின் டீஸர் வெளியிடப்படும் முன் இணையத்தில் வெளியிடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. படக்குழுவினரின் கடின உழைப்பு, முயற்சி ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மனசாட்சியற்ற செயல்’ என்று பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.