திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

நடிகர் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படம் ரிலீஸ் எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் `வட சென்னை'.

News image
Updated On :4 மார்ச் 2018, 9:43 am

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் `வட சென்னை'. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதற்கு முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 8-ம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் தனுஷ் அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 'மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் ... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று' என தனுஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.