இன்று இணையமே நொறுங்கும் அளவிற்கு அதிரடியாக வெளியாகி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் காலா டீஸர் கலக்கிவரும் நிலையில், நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் தா தா 87 என்ற திரைப்படத்தின் டீஸரும் வெளியாகி உள்ளது. இயக்குனர் விஜய் ஸ்ரீ இப்படத்தை இயக்கியுள்ளார் . இதன் டீஸர் இதோ :
சாருஹாசனுக்குத் தற்போது 87 வயதாகிறது. அவர் குணசித்திர வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நிலைக் காரணமாக சில ஆண்டுகளாக திரைபடங்களில் நடிக்காமல் இருந்தார் சாருஹாசன். இந்நிலையில் இயக்குநர் விஜய்ஸ்ரீயின் தா தா 87 படத்தின் கதை அவருக்குப் பிடித்துவிடவே, படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டு நடித்து முடித்தார். தா தா 87 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் சாருஹாசனுடன் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர், கோலிவுட்டில் ரீ எண்ட்ரியாகியிருக்கும் நடிகர் ஜனகராஜ். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த ஜனகராஜ், இந்தப் படத்துக்காக மீண்டும் களம் இறங்கியுள்ளார். இந்த இருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் நிறைந்த கதைதான் ‘தா தா 87’.சாருஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஹீரோயினுக்கு அப்பாவாக, ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.
கதாநாயகிகளாக ஸ்ரீ பல்லவி மற்றும் அனு பல்லவி என இருவர் நடிக்கின்றனர். ஸ்ரீ பல்லவி டோலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் தா தா 87 தான் அவரது முதல் படம். அனுபல்லவி ஊட்டியைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் அவர் வட சென்னையைச் சேர்ந்த ரவுடிப் பெண்ணாக நடிக்கவிருக்கிறாராம்.
லியான்டர் லீ மார்ட்டி இசையில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வித்யாசமான கெட்டப்பில் வயதான தாதாவாக சாருஹாசன் இந்த டீஸரில் மிரட்டுகிறார். உண்மையிலேயே இந்த டீஸரைப் பார்த்ததும் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை தந்துள்ளது.
காலா மற்றும் தா தா 87 என இரண்டு படங்களும் தாதாவை மையமாக கொண்டுள்ளதால் ரசிகர்களின் ஆர்வத்தை இவை தூண்டிவிட்டன. அண்மையில் தா தா 87 படத்தின் டீஸர் வெளியான போது அதிக கவனம் பெறவில்லை. ஆனால் இன்று காலா டீஸர் வெளிவந்த பிறகு, இந்த இரண்டு படங்களையும் கலாய்த்து மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


