ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

2.0 ஏன் 2-வாக மாறியது? படக்குழுவினர் விளக்கம்!

படத்தின் டைட்டிலான தமிழ்ப்படம் 2.0 என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தை கலாய்க்கும் விதமாக இத்தலைப்பு இருந்ததால்

News image
Updated On :22 ஜூன் 2018, 9:09 am

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. தமிழ்ப் படங்களை கன்னா பின்னாவெனக் கலாய்த்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகமான ‘தமிழ்ப் படம் 2.0’ உருவாகி வருகிறது. விரைவில் வெளியாகவிருக்கும் இதிலும் மிர்ச்சி சிவாதான் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார்.

திஷா பாண்டே (தமிழ்ப் படத்தின் நாயகி) முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கண்ணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளர். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரிக்கும் இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் வெளியிடவுள்ளது. 

Story image

இப்படத்தின் டைட்டிலான தமிழ்ப்படம் 2.0 என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தை கலாய்க்கும் விதமாக இத்தலைப்பு இருந்ததால், ரஜினி ரசிகர்களிடையே கசப்பு எழுந்தது. தற்போது திடீரென்று தமிழ்ப்படம் 2.0 என்ற தலைப்பை தமிழ்ப்படம் 2 என மாற்றிவிட்டனர் படக்குழுவினர். தலைப்பிலிருந்து ஜீரோ உதிர்ந்துவிட்டக் காரணத்தை Y NOT ஸ்டுடியோஸ் தங்கள் ஃபேஸ்புக் பதிவில் ப்ரஸ் ரிலீஸாக (இதுவும் கிண்டல் தொனியில்தான்) வெளியிட்டுள்ளது. 

Story image

‘0-வுக்கு ஏது மதிப்பு என அறிவுறுத்தப்பட்டதால், எங்கள் டைட்டிலிருந்து அதை மட்டும் நீக்குகிறோம். இனி இப்படத்தின் தலைப்பு தமிழ்ப்படம் 2 என்றே அழைப்படும்’ என சுருக்கமாக உள்ளது அப்பதிவு.

இது போன்ற அதிரடி நகைச்சுவை துணுக்குகளால் நாளுக்கு நாள் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.