2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பாலிவுட் படம் ‘டங்கல்’. அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானதுஇந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்த வீரரான அமிர் கானுக்கு, நான்கு பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். தோல்வியுற்ற ஒரு மல்யுத்த வீரரான அவருக்கு தன்னால் நாட்டுக்கு ஒரு தங்கப் பதக்கம் கூட வாங்கித் தர முடியவில்லை என்ற வருத்தம் ஒருபுறமும், மகன் பிறந்தால் அவனை ஒரு மல்யுத்த வீரனாக்கலாம் என்ற கனவும் தகர்ந்து போக மனம் உடைந்து போகிறார். குழந்தைகள வளர அவர்களுள் இரண்டு மகள்களுக்கு மல்யுத்தத்தில் ஆர்வம் இருப்பது அறிந்து, தினமும் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்து, தன்னுடைய கனவை நிறைவேற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. நாட்டுப்பற்று, விளையாட்டுக்கு தரப்படாத முக்கியத்துவம் என பல விஷயங்களை உள்ளடக்கிய இப்படம் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனைகளைப் படைத்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குநர் நிதேஷ் திவாரி அடுத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என்று பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகமே எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஸ்டார் மற்றும் சாஜித் நாடியத்வாலா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகர் நடிகைகள் உள்ளிட்டவர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பட டைட்டில் முதல் நடிப்பவர்களின் விபரங்கள் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்றும் இந்தப் படத்தை 2019-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ரிலீஸ் செய்வோம் என்றும் அறிவித்துள்ளது தயாரிப்பாளர் தரப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

சிவகங்கை தொகுதியில் ஜனநாயகக் கடமையாற்றிய வேட்பாளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


