நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் இணைந்திருக்கும் காமெடி நடிகர் இவர்தான்!

காலாவின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

ராக்கி

காலாவின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஜிகர்தண்டா, இறைவி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், ரஜினியுடன் இணைந்திருப்பது இருவர் ரசிகர்களையும் பெரும் எதிர்ப்பார்க்கு உள்ளாக்கிவிட்டது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

அண்மையில் டெராடூனில் படப்பிடிப்பு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் முனீஸ்காந்த் இந்தப் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முண்டாசுபட்டி, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய வித்யாசமான நகைச்சுவை மற்றும் உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்தவர். ரஜினி காந்த் படத்தில் முனீஸ்காந்த் நடிப்பது இதுவே முதல் முறை. போலவே முதல் முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வமான செய்தி வெளிவரும் என்றனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.