அலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி தற்போது ‘பிரம்மாஸ்திரா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஜோடி, சமீபத்தில் நடிகை சோனம் கபூருக்கும், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் இணைந்து கலந்து கொண்டு அசத்தியது. அது முதல் தான் இவர்கள் இருவரைப் பற்றிய வதந்திகளும் பாலிவுட்டில் வலம் வரத்தொடங்கின. ரன்பீர் கபூர் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்; ‘தெரியவில்லை... நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கிறோம், எங்கள் இருவரின் புரிதல்கள் ஒன்றாக இருக்கிறது. அலியா என்னைப் போலவே யோசிக்கிறார். எங்களது முடிவுகள் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன, காதலா என்றால்? அதைப் பற்றிப் பேச இப்போது முடியாது. ஏனென்றால் எங்களுக்கே பதில் தெரியாது. இந்த நட்பு நன்றாக இருக்கிறது. எங்களுக்கு இதைப் பற்றி யோசிக்க அவகாசம் வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.