கடந்த 2017-ல் விக்ரம் நடிப்பில் ஒரு படம் கூட வெளிவரவில்லை. ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கையில் விக்ரம் மூன்று வருடங்கள் அதற்கு மட்டுமே செலவிட்டார். அதன்பிறகு வெளியான இருமுகன், பத்து எண்றதுக்குள்ளே ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. ஒரே படத்தில் நீண்ட நாட்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் சீயான் விக்ரம். மேலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியதால் இந்த இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் சமீபத்தில் நடித்துள்ள படமான ஸ்கெட்ச் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது. இதில் விக்ரமுடன் தமன்னா நடித்துள்ளார். இயக்குநர் ஹரியின் சாமி 2 படத்திலும், கெளதம் மேனனின் துருவ நட்சத்திரத்தில் விக்ரம் பிஸியாக நடித்து வருவதும் ரசிகர்கள் அறிந்த செய்திதான். இயக்குநர் கே.வி.ஆனந்தின் படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்ற கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் விக்ரம் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பதும் உறுதியானது.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனுடன் விக்ரம் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள் இது ஒரு ப்ரென்ச் படத்தின் தழுவல் என்றும், கமல் நடிப்பில் வெளியான தூங்காவனத்தின் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இப்படத்தை இயக்கவிருக்கிறார் தற்போது இப்படத்தின் திரைக்கதையாக்கப் பணிகள் நடந்து வருகிறது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தச் செய்தி கமல் + விக்ரம் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் ஒன்று. காரணம் இருவரும் ஒரே ஊரான பரமகுடியை சேர்ந்தவர்கள். தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக தங்களையே உருமாற்றிக் கொள்பவர்கள். தோற்றப் பொலிவும் உள்ளவர்கள். இவர்களை ஒரே திரையில் காண்பது நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால் இப்பட அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


